உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றுகிறது. அதன்படி தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தப்பிக்க கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் கொண்டதாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இத்தகைய கொடிய வைரஸ் தமிழகத்தில் பரவுவதை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகள் மற்றும் வித்தியாசமான கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களிடத்தில் மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இந்த புதிய வைரஸ் தமிழகத்தின் கண்டறியப்படவில்லை. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் இருந்து தமிழகத்தில் பரவாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்தியாவில் புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நள்ளிரவு முதல் அனைத்து விமான நிலையங்களில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.விமான நிலையங்களில் பரிசோதனைக்கு பின்னரே வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி.