Categories
மாநில செய்திகள்

BREAKING : ஒமைக்ரான் வைரஸ்….  தமிழகத்தில் 12 ஆய்வகங்கள்…. வெளியான தகவல்…!!!

தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து உள்ளது.  இதற்கு B 1.1. 529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வகையான வைரஸை  மூன்று மணிநேரத்தில் கண்டறியும் வசதிகளைக் கொண்ட 12 அரசு ஆய்வகங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் 12 அரசு ஆய்வாளர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. Taqpath என்ற கிட் கொண்ட 12 ஆய்வகங்களில் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்படும் என்று தமிழ்நாடு மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இதில் மரபணு பகுப்பாய்வு செய்யப்படும்  என்றும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |