வெளிநாடுகளில் புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து நாடுகளிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்படி இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த இரண்டு பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. பாதிப்பு உறுதியாகியுள்ள இருவரில் ஒருவருக்கு 66 வயதும், மற்றொருவர் 46 வயது உடையவர்கள். புதிய வகை வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள இருவரோடு தொடர்பில் உள்ளவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து டெல்டா கொரோனா வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது ஒமைக்ரான் கொரோனா வைரஸ் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தற்போதைய சூழலில் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் யாரும் மீறி விட வேண்டாம். இந்தியாவில் இந்த புதிய வகை வைரஸ் பரவியதால் மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம். விழிப்புணர்வுடன், அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் எந்த வகை வைரஸ் ஆக எதிர்கொள்ள முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.