அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் நேற்று அதிமுக பொதுக்குழு கூடியது. இந்த பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 11ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் பொதுக்குழுவை புறக்கணித்துவிட்டு டெல்லி சென்ற ஓபிஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது.
இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு விட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நேற்று வரை மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், வைத்திலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகவும் இருந்தனர் என்று குறிப்பிட்டார். இதனால் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் பதவிலிருந்தும், வைத்திலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.