தனியார் ஆலையில் ரசாயனக் கசிவு ஏற்பட்டதத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து, 13 பேர் அடுத்தடுத்து மயக்கமடைந்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள தனியார் ஆலையில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. ரசாயன ஆலையில் வெளியேறிய விஷவாயு தாக்கியதில் பொதுமக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ரசாயன வாயு கசிவுற்றதால் அதை சுவாசித்த, நடுப்பாளையத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட 13 பேர், சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.