Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒரு நாள் முழுவதும் முடங்கும் அபாயம்… 1 லட்சம் போலீஸ் குவிப்பு… அதிரடி…!!!

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதிலும் சாலை மறியல் போராட்டத்தில் விவசாய சங்கம் ஈடுபட உள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதற்கு மத்தியில் கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.

அப்போது விவசாயிகளை தடுக்க முயன்ற போலீசார் நடத்திய தடியடி தாக்குதலை விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று நாடு முழுவதும் சக்கா ஜாம் என்ற பெயரில் போராட்டம் நடத்த உள்ளனர்.

அதாவது மற்ற வாகனங்களை ஓட்ட செய்யாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது. தமிழகத்தில் இந்த போராட்டத்தில் பங்கேற்க விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன. அதனால் தமிழகம் முழுவதும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை சமாளிக்க தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |