Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஒரு மாதத்திற்கு மேல் – அரசு செம சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால்  வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு வேலையின்றி பொருளாதாரத்தை இழந்த மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் ஒரு மாதத்திற்கு மேல் வேலையின்றி இருக்கும் ஊழியர்கள் பிஎஃப் கணக்கின்  மொத்த தொகையில் இருந்து 75 சதவீதம் பணம் எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா காரணமாக வேலையிழந்து கணக்கில் வரவு செலுத்தபடாதவர்கள் தங்கள் பிஎப்பில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் கணக்கை முடிக்காமல் உள்ளதால்,  பென்ஷனுக்கான தகுதியும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |