Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ.1000 ஆக நிர்ணயம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆற்று மணலுக்கு அடிப்படை விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குவாரிகளுக்கு டெண்டர் விடப்பட்டு மணல் அதிக விலைக்கு விற்கப்பட்ட நிலையில் தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆற்றுப் படுகையில் இருந்து மணலை எடுத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் 24 மணி நேரமும் ஆற்று மணல் விற்பனை சிசிடிவி கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும். வீடு கட்டுபவர்களுக்கு மணல் விற்பனை செய்ய தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள், ஏழை எளியோர் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆற்று மணல் விற்பனையை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்தால் முறைகேடுகளை தடுக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |