அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த அக்டோபர் 10ஆம் தேதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது தற்போது காலதாமதமாக இன்று உருவாகியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி செல்லும்.
மேலும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் 3 நாட்களுக்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மிக அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.