ஜப்பான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் இந்தியா இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் 65 கிலோ ஆடவர் மல்யுத்தப் போட்டியில் படைத்த சுற்றுகளில் வெற்றி பெற்று இந்தியாவின் பஜ்ரங் புனியா அரையிறுதியில் நுழைந்தார்.
ஆனால் அதில் தோல்வியுற்ற நிலையில், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்ற வெண்கல பதக்கம் வென்றுள்ளார். கஜகஸ்தானின் டாலட் நியாஜ்பெகோவுக்கு எதிராக ஆடிய அவர் 8-0 என்ற கணக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கான ஒலிம்பிக் பதக்கம் 6 ஆக அதிகரித்துள்ளது.