உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர்
அந்தவகையில் மதுரை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இரண்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்த ரேவதி தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்கிறார். இவர் ஒலிம்பிக்கில் சாதனை படைக்க பலரும் வாழ்த்துகின்றனர்.