இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் இலங்கையில் தலைமறைவாக உள்ள மகிந்த ராஜபக்சே அங்கிருந்து தப்பித்து இந்தியாவிற்குள் தஞ்சமடைந்துள்ளதாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த தகவலுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராஜபக்சே மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்கியிருக்கும் இடம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் திருகோணமலை கடற்படைத் தளத்தில் உள்ள பில்லா ஹவுஸ் எனப்படும் பங்களாவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.