Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் அதிரடி முடிவு…. அதிமுகவில் அடுத்த பரபரப்பு….!!!

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியே இரண்டாகி நிற்கிறது. இதனிடையே பல்வேறு சர்ச்சைகளோடு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடந்து முடிந்தது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கட்சியில் 23 தீர்மானங்களை ரத்து செய்ததாக இன்று அறிவித்தது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது என தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் முறையிட உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |