அதிமுக சட்ட திட்டங்களின் படி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். அதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது .அதன் பின்னர் அம்மா மறைவுக்குப் பிறகு 2019ஆம் வருடம் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக உட்கட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போனது. இந்தநிலையில் 13 ம் தேதி முதல் 23ம் தேதி வரை உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெற்றது.
ஓபிஎஸ் மீண்டும் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், எடப்பாடி பழனிச்சாமி இணை. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் அவர்களில் முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என பலரும் வேட்பு மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனுக்கள் மீதான மறுபரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் மனுக்களை தவிர மற்றவை நிராகரிக்கப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு போட்டி ஏற்படாததால் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. இதன்மூலம் ஓபிஎஸ் மற்றும் பிபிஎஸ் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.