அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியில் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த 2ஆம் தேதி வெளியானது. முதல் கட்டமாக கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த போட்டியில் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இதை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் 282 வேட்புமனுக்கள் பெறப்பட்ட நிலையில் அதில் தகுதி இல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மற்ற அனைத்து வேட்புமனுக்களும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக விண்ணப்பித்திருந்தனர்.
இதனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஏராளமான கட்சி தொண்டர்கள் அதிமுக அலுவலகத்தில் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக குவிந்துள்ளனர். மேலும் பாதுகாப்புக்காக காவல்துறையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.