Categories
மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பெயர் நீக்கம்…. ADMK-வில் சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!

அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் தற்போது உச்சக் கட்ட மோதலாக மாறியுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கட்சி அலுவலகங்களிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ “நமது அம்மா”நாளிதழின் நிறுவனர் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நாளிதழின் நேற்றைய பதிப்பில், ஓபிஎஸ், ஈபிஎஸ் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய பதிப்பில் ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், இபிஎஸ் – இன் அடுத்தகட்ட நகர்வாக இது பார்க்கப்படுகிறது. இது அதிமுகவில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |