அதிமுக அலுவலக கலவரத்தின்போது திருடப்பட்ட அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆவணங்கள், பரிசுப்பொருட்களை திருடிச் சென்று விட்டதாக இபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்திருந்த நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
Categories