Categories
மாநில செய்திகள்

BREAKING : ஓ.பி.எஸ். சொன்ன குட்டிக்கதை சசிகலாவுக்கு பொருந்தாது…. ஜெயக்குமார் பேட்டி…!!!

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற அதிமுக கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் சொன்ன குட்டிக்கதை சசிகலாவுக்கு பொருந்தாது என்று அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி இருவரும் இன்று கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய ஓ பன்னீர்செல்வம் ‘பாவத்தை சுமந்து அவர்களை மனம் திருத்த வந்துள்ளேன்’ என்று இயேசுவின் வரிகளை சுட்டிக்காட்டிய அவர் குட்டி கதை ஒன்றைச் சொன்னார். தொடர்ந்து பேசிய அவர் தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அதை ஏற்பதே தலைமைக்கு அழகு என்று கூறினார்.

ஓ பன்னீர்செல்வம் கூறியதை தொடர்ந்து பலரும் அதை சசிகலாவை சுட்டிக்காட்டி தான் அவர் கூறியுள்ளார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை மறுத்த அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் ஓபிஎஸ் சொன்ன குட்டிகளை சசிகலாவுக்கு பொருந்தாது என்று கூறினார். சசிகலா இல்லாமல் அதிமுக நன்றாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது என்று அவர் கூறியுள்ளார் .

Categories

Tech |