தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பயிர்க்கடன் தள்ளுபடிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசனை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயிகளால் பெறப்பட்டு ஜனவரி.,31 வரை நிலுவையில் இருந்த பயிர்க்கடன் வட்டி தள்ளுபடி செய்யப்படும். குற்ற நடவடிக்கை, நிதி முறைகேடுகளுக்கு உள்ளான இனங்களுக்கு கடன் தள்ளுபடி இல்லை.
பயிர்கடன்களுக்கான பெற்றிருந்தால் எஞ்சிய தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். வேளாண்மை சாரதா இனங்களுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.