நேற்று ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்கள், இரண்டு விசைப் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்துள்ளனர். ஏற்கனவே 55 மீனவர்கள் மற்றும் 8 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இருந்த நிலையில் தற்போது மேலும் 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடித்து சென்றதை கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 400 விசைப்படகுகளை சேர்ந்த சுமார் ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.