தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் மக்கள் அதிக அளவில் கூடுவதால் ஞாயிற்றுக்கிழமை சில்லறை வியாபாரத்திற்கு தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மீன் மார்க்கெட் நுழைவு வாயில் முன்பு, மீன் மார்க்கெட்டில் ஞாயிறு அன்று சில்லரை வியாபாரம் நடைபெறாது. மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.