Categories
மாநில செய்திகள்

Breaking: கடும் ஊரடங்கு நீட்டிப்பு?…. தமிழக அரசு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில  நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக  முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி தற்போது தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் ஜூன் 7-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருப்பதால் அதை மேலும் நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா அதிகம் உள்ள மேற்கு மாவட்டங்களில் ஊரடங்கு கடும் விதிகளுடன் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனாவில் கட்டுக்குள் வராததால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |