Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: கடும் ஊரடங்கு…. மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்பு காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பலனாக கடந்த மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. ஆனால் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவை மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வீதிகள் தோறும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Categories

Tech |