நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி அனைத்து வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோயம்பேடு சந்தைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலையடுத்து ஞாயிற்றுக்கிழமை தோறும் கோயம்பேட்டில் அனைத்து கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாதத்தின் 2-வது மற்றும் 4-வது ஞாயிறுகளில் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.