இந்தியாவிற்கு வருகை தரும் முதல் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி கூறிய 20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த திட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உறுதி திட்டம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதில் சுகாதாரத் துறைக்கு 50 கோடி, மற்ற துறைகளுக்கு 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர கால கடன் உதவியாக தொழில் முனைவோருக்கு 1.5 லட்சம் கோடி கடன் வங்கிகள் மூலம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகள் தளர்த்த பட்டவுடன், இந்தியாவுக்கு வருகை தரும் முதல் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என அவர் தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவமனை உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு 100 கோடி வரை கடன் வழங்கப்படும். சுற்றுலா வழிகாட்டிகளுக்கு உத்திரவாதம் என்று ஒரு லட்சம் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது தவிர பல நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.