தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவரின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரலில் பிரச்சனை இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட அவர் நுரையீரலில் தொற்று தீவிரமானதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் நுரையீரல் தானம் கிடைக்க தாமதமானது.
இதற்கிடையே ஜூன் 28ஆம் தேதி இரவு 7 மணி அளவில் வித்தியாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு முன்னதாக 95 நாட்கள் சுயநினைவே இல்லாமல் இருந்தார் எனவும், சுயநினைவு திரும்பாமலே இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இவரின் மறைவுக்கு ஏராளமான திரைப்படங்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நடிகை மீனா கணவர் வித்யாசாகரின் மரணம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “எனது கணவர் வித்யாசாகரின் மரணம் குறித்து தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் எங்கள் குடும்பத்துடன் நின்று உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.