தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கணமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நகரும் என்பதால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக நேற்று முதல் பல மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.