Categories
மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி…. புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

தெற்கு வங்க கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. அதன்படி 5 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலும் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |