தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதனால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக சென்னையில் கனமழையின் காரணமாக எங்கு பார்த்தாலும் மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்து காணப்படுகின்றது. இந்த சூழலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.
தொடர் கனமழையின் காரணமாக, கரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர், சேலம், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.