தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர்.
தொடர் மழை காரணமாகவும், அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,விருதுநகர், திருவாரூர், குமரி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாகை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,அரியலூர் ,பெரம்பலூர் (8 ஆம் வகுப்பு வரை) ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.