பாராலிம்பிக் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். மூன்றாவதாக வெண்கலப் பதக்கத்தை பாட்னாவை சேர்ந்த சரத்குமார் வென்றிருக்கிறார். இரட்டை பதக்கங்கள் தற்போது உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கின்றன. இந்தியர்களைப் பொறுத்தவரை பல முயற்சிகளை முன்னெடுத்தார்கள். அவர்களுக்கான வாய்ப்பு என்பது அதிகப்படியாக வழங்கப்பட்டது. மூவருக்கும் தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்வதற்கான வாய்ப்பும் அதிகப்படியாக வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு தங்கம், வெள்ளி முதல் இரண்டு இடங்களுக்கான வாய்ப்பும் அடுத்தடுத்த வழங்கபட்டது. இருப்பினும் கூட வெள்ளிப்பதக்கம் என்பது தற்போது தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு சொந்தமாக இருக்கிறது. வெண்கலப் பதக்கத்தை பாட்னாவை சேர்ந்த சரத்குமார் என்ற வீரர் வென்றிருக்கிறார். ஏற்கனவே 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்க பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories