கடந்த 8 மாதங்களாக கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்திய நாடே போராடிக் கொண்டு வருகிறது. முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், சுகாதாரத் துறையினர், காவல் அதிகாரிகள் என பலரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் முன் களப்பணியாளர்கள் உயிரிழந்த நிலை இருந்தாலும்… மக்களுக்காக தங்களின் உயிரையும் துச்சமென நினைத்து கொரோனாவுக்கு எதிரான போரை சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களுக்கு மத்திய – மாநில அரசுக்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது மத்திய அரசு அவர்களுக்கான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா முன் களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்லூரியில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதித்து இறந்த பணியாளர்களின் வாரிசுகளில், மத்திய தொகுப்பிலிருந்து தகுதி பெற்றோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும். கொரோனா வார்டுகளில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு உள்ஒதுக்கீடு பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.