நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் நலனை கருத்திக்கொண்டும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் சலுகைகளை அறிவித்து வந்த நிலையில், மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி கொரோனாவால் உயிரிழந்த குழந்தைகளின் உயர்கல்விக்கு கடன் வழங்கப்படும் என்றும், இதற்கான வட்டி பிஎம்கேர்ஸ்-இல் இருந்து செலுத்தப்படும் என்றும் [பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தந்தை மற்றும் தாய் ஆகியோரை கொரோனாவால் இழந்த குலந்திகளுக்கு பிஎம் கேர்ஸ் மூலம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.