Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING :கள்ளக்குறிச்சி வன்முறை…. மேலும் ஒருவர் கைது….. பெரும் பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி படித்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு சம்பவம் அரங்கேறியது. கடந்த 17ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். அந்த பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டது. மேலும் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான கலவர வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 308ஆக உயர்ந்துள்ளது. கலவரத்தின்போது காவல்துறை வாகனத்தைத் தீ வைத்து எரித்ததாக 19 வயதான நிதிஷ் என்கிற வசந்தனை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர்.

Categories

Tech |