வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளதாக தேர்தல் பொறுப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து அறிவிப்புகளையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. சசி தரூர், மணீஷ் திவாரி, கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.யாருக்கெல்லாம் வாக்களிக்க உரிமை இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருந்தனர்..
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி டெல்லி தலைமை அலுவலகத்தில் 9,100 வாக்காளர்கள் கொண்ட வாக்காளர் பட்டியலை இறுதி செய்துள்ளது. ஒவ்வொரு வாக்காளருக்கும் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க அதிகாரம் படைத்த ஒவ்வொரு வாக்காளர்க்கும் க்யூ ஆர் கோடு கொண்ட அடையாள அட்டை அளிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது.
அந்த கியூ ஆர் கோடு அடையாள அட்டை இன்று தயாராகி நாளை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. தேர்தலை முறையாக நடத்தப்படும் என்று பொறுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வரலாற்றில் வாக்காளர் அட்டை முதல் முறையாக வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.