ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை. இதனையடுத்து தற்போது இந்த விபத்தில் தற்போது 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கோவையிலிருந்து சிறப்பு மருத்துவ குழு விரைந்துள்ளது. இந்த நிலையில் முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மீட்புப் பணியை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.