கோவை உக்கடம் அருகே, ஒரு கோவில் முன்பாக நின்றிருந்த காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இறந்தவரின் பெயர் ஜமேசா முபின் என்பதும் 2019ல் இவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவம் திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாருடன் அதிவிரைவுப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.