Categories
தேசிய செய்திகள்

BREAKING: காற்று மாசுபாடு…. டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்….!!!!

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் காற்றின் தரம் மிக மோசமான நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது. வாகன புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை ஆகியவற்றால் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்கணிப்பு ஆராய்ச்சிக்கான அமைப்பை இதை நாள்தோறும் கண்காணித்து வருகிறது. இன்று காலையிலும் காற்றில் புகை மாசு அதிகமாக இருந்ததால் காற்று தரக்குறியீடு 316 என்கிற அளவில் இருந்தது. டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காற்று மாசு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காற்று மாசுபாடு குறித்து டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நிர்வாகத்தை நடத்த முடியவில்லை என்றால் அதைக் கண்காணிக்க யாராவது நியமிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருக்கும்போது பள்ளிகளை ஏன் திறந்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் காற்று மாசுபாட்டை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளுங்கள் என்றும் ஏற்கனவே உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |