ஆந்திர மாநிலம் மாதாபுரம் அருகே இன்று காலை நடந்த கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கர்னூல் என்ற மாவட்டம் மாதாபுரம் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆந்திராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.