Categories
மாநில செய்திகள்

BREAKING: காலையில் தமிழக மக்களுக்கு…. பெரும் அதிர்ச்சி செய்தி….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அதன் காரணமாக ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதனால் எந்தவித மாற்றமும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதன்படி சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசு அதிகரித்து ரூ.93.84-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 24 காசுகள் அதிகரித்தது ரூ.87.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Categories

Tech |