கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வரும் நாட்களில் கடுமையான வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகளுக்குள் முடிக்க மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளியில் காலையில் நடத்தப்படும் வழிபாட்டை நிழலாக உள்ள பகுதியில் நடத்த வேண்டும் எனவும், வெயில் அதிகமாக உள்ளதால் விளையாட்டுகளை காலைநேரத்தில் நடத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி வாகனங்களில் அதிக அளவிற்கு மாணவர்களை ஏற்றி செல்ல கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் பள்ளிகளின் நேரம் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.