Categories
மாநில செய்திகள்

BREAKING: கால வரம்பிற்குள் அறிவிப்புகளை நிறைவேற்ற…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகின்றது. அதன்படி தற்போது வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் அறிவிப்புகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வருவதற்கு துறை செயலாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கால வரம்பிற்குள் அறிவிப்புகளை நிறைவேற்ற வேண்டும். அறிவிப்பு களை செயல்படுத்தும் போது வழக்குகள் மூலம் தடை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். வாக்குறுதிகள் அனைத்தும் மக்கள் நன்மைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

அமைச்சர்கள் மட்டுமின்றி அனைத்து துறை செயலாளர்கள் பணிகளையும் நேரடியாக கண்காணிப்பேன்.திட்டங்களை நிறைவேற்ற துறை செயலாளர்கள் துணை கமிட்டி ஒன்றை அமைத்துக் கொள்ளலாம். திட்டங்கள் செயல்படுத்த படுவதை ஆன்லைன் தகவல் பலகை மூலம் மக்கள் அறியலாம். அறிவிப்புகள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டியுள்ளது. அதனால் திட்டங்கள் செயல்படுத்தப்படும் அதை நான் நேரடியாக கண்காணிப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Categories

Tech |