சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கில் 5 காவலர்களுக்கு 3 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மற்றும் மகன் சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டநிலையில் இருவரும் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கொலை வழக்காக பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் பாதிக்கபட்டவர்களின் குடும்பம் உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்த சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கின் முக்கியமாக குற்றச்சாட்டு பட்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்களான முத்துராஜா முருகன் ஆகிய 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி குமார இன்று காலை 11 மணிக்கு 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடதன் அடிப்படையில் இன்று காலை நீதிமன்றத்தில் சம்பந்தபட்ட 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். முன்னதாக அவர்கள் உடலின் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலமாக கண்டறிந்து, அதன் பின்னர் நீதிபதி முன்பு ஆஜராகினர். இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் டிஎஸ்பி விஜயகுமார் சுக்லா ஆஜராகி தன் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.
அப்போது, இந்த வழக்கில் முக்கியமான குற்றவாளிகளாக சம்மந்தப்பட்ட 5 பேர் தான் இருக்கின்றார்கள். எனவே இவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் சம்பந்தப்பட்ட காவலர்களிடம் தனித்தனியாக கேட்டார்கள்… நீங்கள் சிபிஐ காவலில் சென்று ஐந்து நாட்கள் விசாரணைக்கு செல்ல விருப்பமா என கேட்டார்கள். முதலில் மறுத்த அவர்கள்… சிபிஐ டிஎஸ்பி விஜயகுமார் சுக்லா, எங்களது விசாரணை போது எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. நாங்கள் இவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வோம், எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரணை நடத்துவோம் என்று மீண்டும் தெரிவித்ததையடுத்து சிபிஐ விசாரணைக்கு செல்ல சம்மதம் தெரிவித்தார்கள்.
மேலும் எங்களுடைய வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும், எனவும்போலீசார் அதே போன்று சம்பந்தப்பட்ட வழக்கில் அடுத்த நீதிமன்றத்தில் எங்களுக்காக அவர்கள் நேரில் ஆஜராகி வாதாட அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் சொல்லியிருந்தார்கள். இதனால் முதலில் இவர்கள் 5 பேரும் ஐந்து நாட்கள் சிபிஐ காவலுக்கு செல்வதற்கு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்ட நிலையில் தற்போது வருகின்ற 16ஆம் தேதி வரை 3 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு கொடுத்து இருக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட 5 பேரையும் இன்று காவலில் எடுத்து செல்லும் சிபிஐ அதிகாரி மீண்டும் 16-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்டும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அந்த உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வழக்கில் முதல் முறையாக கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட இந்த ஐந்து பேருக்கும் வருகிற 16ம் தேதியுடன் நீதிமன்ற காவல் நிறைவடைகின்றது.அதன் காரணமாக அவர்களுக்கு 3 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி கொடுத்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.