Categories
மாநில செய்திகள்

BREAKING : ”காவலர் தேர்வு – இடைக்காலத்தடை” ஐகோர்ட் அதிரடி உத்தரவு ….!!

2019 ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வு நியமண நடைமுறைகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த 15 பேர்  தொடர்ந்த வழக்கில் , 2019ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வில் ஒரே தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் , தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்று வழக்கு தொடர்ந்தார்.

அரசு தேர்வுகளில் பலமுறை இப்படி முறைகேடுகளை  நடைபெறுவது வேதனை அளிக்கின்றது என்று தெரிவித்த நீதிபதி , டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளில் தான் மோசடி நடைபெறுகின்றது என்றால் காவலர் தேர்விலும் மோசடி நடைபெறுகின்றது.

மோசடிக்காரர்கள் காவல்துறையில் சேர்ந்து என்ன செய்யப் போகிறார்கள் என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதி சீருடை பணியாளர் தேர்வில் எந்த நடவடிக்கை மேற்கொள்ள கூடாது என்று உத்தரவிட்டு தமிழக அரசு தேர்வு வாரிய செயலாளர் பதில் அளிக்க கோரி வழக்கை ஒத்தி வைத்தார்.

Categories

Tech |