Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : கிழக்கு டெல்லியின் 10 தொகுதிகளில் 8ல் ஆம் ஆத்மி முன்னிலை …!!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்குக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன.

பெரும்பாலான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறுகின்றன. இருப்பினும், கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளும் பாஜக, 48 இடங்கள் வரை வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்கின்றது.

சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இருப்பினும், தேர்தல் வாக்குப்பதிவு நிலவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் அதிக காலம் எடுத்துக்கொண்டது என்று ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன. முதலில் தபால் வாக்குகள் என்னும் பணி தொடங்கியது. இதில் தொடக்க முதலே ஆம் ஆத்மி முன்னிலையில் வகித்து வருகின்றது.

தற்போதைய நிலவரம் படி கிழக்கு டெல்லியின் 10 தொகுதிகளில் 8ல் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கின்றது. 2ல் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.  டெல்லி சாந்தினி சவுக்-ன் 10 தொகுதிகளில் 9ல் ஆம் ஆத்மி முன்னிலையும் , ஒன்றில் காங்கிரஸ் முன்னிலையும் வகுக்கின்றது.

Categories

Tech |