Categories
தேசிய செய்திகள்

BREAKING: குஜராத்தில் 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு… அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த குஜராத்தில் 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன.

அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கொரோனா இரண்டாவது அலை பெரும்பாலான மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை ஒவ்வொரு மாநிலமும் விதித்து வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவளைய கட்டுப்படுத்த இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்எனவும் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |