டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி நாலாவது சுற்று வரை சென்ற நிலையில், நிராகரிக்கப்பட்டுள்ளது.
வ.உ.சி, வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. வ.உ.சி, வேலுநாச்சியார் போன்றவர்கள் தேசிய அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அரசின் ஊர்தி மட்டுமின்றி கேரளா, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது.