நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திமுக வெற்றி பெற்ற பின்னர் தான் அறிவித்த அறிக்கைகளை ஒன்றாக செய்து வரும் நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்று மக்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமை தொகை திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த நிலையில் இந்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த திட்டத்தை அமல்படுத்தும் தேதி இன்று தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.