Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

BREAKING: குட்டி விராட் கோலி கம்மிங்… ரசிகர்கள் ஹேப்பி…!!

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் சேர்ந்து உள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் 2013 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் 2017 டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், “நாங்கள் மூன்று பேர்” என்று பதிவிட்ட கேப்டன், தானும் அனுஷ்கா சர்மாவும் இணைந்து உள்ள புகைப்படத்தையும் பதிவிட்டு வெளியிட்டிருந்தார். இந்த பதிவின் மூலம் இந்த வருடம் விராட்க்கு குழந்தை பிறப்பது உறுதியாகி உள்ளதால், ரசிகர்கள் இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். மேலும் பல பிரபலங்களும் விராட் கோலிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |