Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது- TNPSC விளக்கம் …!!

குரூப் 4 தேர்வு முறைகேட்டையடுத்து தேர்வு இரத்து செய்யப்படாது என்று TNPSC விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட்து. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள்.இதில் 100 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்ததாக வெளியான தகவல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முறைகேட்டுக்கு தொடர்பான அதிகாரிகள் அடுத்தடுத்து கைதாகி தமிழகம் பரபரப்புக்குளாகி இருந்தது.இதனால் மற்ற தேர்வர்களும் கலக்கம் அடைந்தனர்.

முறைகேட்டால் எங்களுடைய தேர்வு ஏற்றுக்கொள்ளப்படுமா ? தேர்வை இரத்து செய்து வீடுவார்களோ ? என்ற அச்சத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது TNPSC முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தேர்வர்களின் அச்சத்தைப் போக்க கூடிய வகையில் ஒரு விளக்கத்தை கொடுத்து உள்ளது.

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் உள்ளவர்களை நீக்கி விட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடபட்டு அனைத்து பணியிடங்களுக்குமான பணி நியமன ஆணை வழங்கப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். எனவே மற்ற தேர்வர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் கொடுத்துள்ளது.

Categories

Tech |